பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த குடும்ப உறுப்பினர்கள் பலரும் நடிகை ஓவியாவை கார்னர் செய்து ஓரங்கட்டியது, ஆரவ் அவரை காதைப்பதாக ஏமாற்றியது, அதன்பின் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது என பல விஷயங்கள் ஓவியாவுக்கான ஆதரவுக்குரலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன.. இந்தநிலையில் நடிகர் சிம்பு ஓவியாவை திருமணம் செய்துகொள்வேன் என டிவிட்டரில் அறிவித்ததாக ஒரு தகவல் வெளியானது..
“சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை உருவாக்கி அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருது தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவிவருகிறது. ஆனால் இது வதந்தி என விளக்கமளித்துள்ளார் சிம்பு..
இதுபற்றி அவர் கூறும்போது, ”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்பட வைக்கும் செய்தி. இதுபோல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறும் ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் சிம்பு.