சேர்ந்து போலாமா – விமர்சனம்

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரம் ஒன்றில் மாடலிங் போட்டோ கிராபரான வினய், மாடலிங்கில் ஆர்வம் உள்ள ப்ரீத்தியை லவ் பண்ணுகிறார். ஆனால் ப்ரீத்திக்கு திடீரென வேறு ஒருவருடன் நிச்சயமானதோடு, வேறு ஊருக்கும் அழைத்துச்செல்லப்படுகிறார்..

அவரை தேடிக்கிளம்பும் வினய்யுடன், சேர்ந்துகொள்கிறார் அவரது இளம் வயது தோழியான மதுரிமா.. ஆனால் வழியிலேயே சில மர்ம நபர்கள் வினய்யை தாக்குகின்றனர்.. கடைசியில் தேடிப்போன காதலியும் அவரை உதறிவிட, இறுதியில் மதுரிமாவின் உண்மையான காதலுக்கு சொந்தக்காரர் ஆகிறார் வினய்.

வினய் தனக்கு எவ்வளவு நடிப்பு வரும் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. கதாநாயகிகளில் மதுரிமா க்யூட் கேர்ள்.. அவர் திடீரென வினய்யை தேட வருவதற்கான ட்விஸ்ட்டை தந்து திருப்பம் ஏற்படுத்துகிறார். ப்ரீத்தியோ சீரியல் ரேஞ்சிற்கு நடித்திருக்கிறார்.

தம்பி ராமையாதான் நல்ல ரிலாக்சேஷன் தருகிறார். 28 நாட்கள் மனைவிக்காக ஒதுக்கிவிட்டு 2 நாட்கள் மட்டும் தனக்காக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்கும் அவர், ஒவ்வொரு பெண்ணினி வீட்டிற்கும் ஒவ்வொரு கெட்டப்பில் சென்று மாட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகும் காட்சிகள் காமெடியாகத்தான் இருக்கின்றன.

முழுக்க முழுக்க அமெரிக்க நகரங்களில் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் சுற்றுலா போய்வந்தது போன்ற அனுபவத்தை (மட்டுமே) தருகிறது.. சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவு அதை சாத்தியமாக்கி இருக்கிறது. மிகப்பெரிய ட்விஸ்ட் இல்லை.. பரபரப்பும் இல்லை. அதற்காக போரடிக்கவும் இல்லை. படத்தின் இயக்குனர் அனில்குமார் இன்னும் சில காட்சிகளை விறுவிறுப்பாக மாற்றியிருந்தால் முழுமையாக  ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

Serndhu Polama ReviewThambi RamaiahVinayசேர்ந்து போலாமா – விமர்சனம்தம்பி ராமையாமதுரிமாவினய்