பலத்த அடிபட்டதால் மூன்று மாதங்களாவது லாரன்ஸிற்கு ஓய்வும், சிகிச்சையும் தேவை என டாக்டர்கள் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள். அதனால் ஓய்வுக்கு பிறகு டிசம்பரில்தான் ‘கங்கா’ படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். அதுவரை டாக்டர்கள் அவருக்கு வீட்டிலேயே பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து லாரன்ஸ் சொல்லும்போது “இரண்டாம் பாதியில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் தான் இரண்டு மாத ஓய்வு எடுக்கிறேன். நான் வணங்கும் எல்லாம்வல்ல ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையால விரைவில் குணமடைந்து விடுவேன்” என்கிறார் லாரன்ஸ்.