கடைசியாக அவர் தயாரித்த ‘நாணயம்’ படம் ஓடாத்தால் சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கிவிட்டார். படத்தின் பெயர் ‘திருடன் போலீஸ்’. இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதைதான் மீண்டும் சரணுக்கு உடனடியாக படம் எடுக்கும் ஆவலை தூண்டியதாம்.
‘அட்டகத்தி’ தினேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ரம்மி’ புகழ் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார் இவர்களுடன் பாலசரவணன், நிதின் சத்யா, ஜான்விஜய், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.சரணின் நண்பன் யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். சரணின் கேபிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா ஃபிலிம் சார்பில் ஜே.செல்வகுமார் இணைந்து தயாரிக்கிறார்.
210711 84599I dont normally have a look at these types of sites (Im a pretty modest person) – but even though I was a bit shocked as I was reading, I was undoubtedly a bit excited as well. Thanks for making my day 282740