பென்சில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் சூர்யா..!

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷை கதாநாயகன் ஆகவேண்டும் என அச்சாரம் போட வைத்த படம் தான் ‘பென்சில்’.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்திற்கு முன்பாக டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என இரண்டு படங்கள் அவரை ஹீரோவாக வெளிக்கொண்டு வந்துவிட்டன. இப்போது முதலில் ஆரம்பித்த பென்சிலுக்கும் விமோசனம் கிடைத்துள்ளது.

ஆம்.. விரைவில் பென்சில் படத்தை வெளியிடும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மணிகண்டன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லரை இன்று மாலை சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை மகிழ்வித்தார். இந்த நிகழ்வில் இயக்குனர் மணிகண்டன், ரியாஸ்கான், உமா ரியாஸ்கான் உளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

PencilSuryaசூர்யாபென்சில்ஸ்ரீ திவ்யா