ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’ மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம் பாகங்களை சந்திக்க இருக்கிறது.. இந்த வருடத்தின் முதல் ஆரம்பமாக ஆர்.கே.செல்வமணி-பிரசாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ‘புலன் விசாரணை-2’ வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது..
கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருப்பதால் இந்த வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தெரிகிறது. இன்னொரு பக்கம் ‘ஜித்தன்-2’வும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இதுதவிர ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை பற்றியும் ஹரி சூசகமாக தெரிவித்துள்ளார். ‘தெகிடி’ படத்திற்கும் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆலோசித்து வருகிறார்களாம்.. ஆக இந்த வருடம் இரண்டம் பாகங்களால் களைகட்டும் என்றே தெரிகிறது.