இன்னும் ஒரு வாரத்துக்கு ரசிகர்களுக்கு ‘கபாலி’ ஜுரம் குறைய வாய்ப்பே இல்லை.. கபாலியின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் வரும் வெளிக்கிழமை கூட, அதாவது ஜூலை-29ல் முக்கியமான படங்கள் எதுவும் ரிலீசாகது என்றே தெரிகிறது. ஆனால் அதன்பின் ஆகஸ்ட்-5ல் இருந்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.
அந்தப்பட்டியலில் ஆகஸ்ட்-5ஆம் தேதி ரிலீஸாக நல்ல நாள் குறிக்கப்பட்டு இருக்கும் ‘திருநாள்’ படம் ரொம்பவே கவனிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.. காரணம் படத்தின் நாயகன் ஜீவா என்பதைவிட, அதில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா என்பதை சொல்லவும் வேண்டுமோ..? ஆகவே, அடுத்து நயனத்ரா பீவர் ஆகஸ்ட்டில் ரசிகர்களை தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய ராம்நாத் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.