மீனாவுக்கு பதில் நவ்யா..! ஆனால் ஆஷாவுக்கு பதில் ஆஷா தான்..!

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது கதையில் மொழிக்கேற்றவாறு சில மாறுதல்களை செய்வதோடு அந்த மொழியில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள.

ஆனால் ஒருசில கனமான கதாபாத்திரங்களை ஒரிஜினல் படத்தில் நடித்தவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்களுக்கு தோன்றுவது உண்டு. மலையாளத்தில் ‘பாடிகார்டு’ படத்தில் நடித்த மித்ரா குரியன் தான் தமிழில் அதன் ரீமேக்கான ‘காவலன்’ படத்திலும் அதே கேரக்டரில் நடித்தார். ‘சூர்யா நடித்த சிங்கம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதிலும் பிரகாஷ்ராஜ் தான் வில்லனாக நடித்தார். இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

அந்தவகையில் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக மோகன்லால் நடித்த கேரக்டரில் ரவிச்சந்திரன், ஹீரோயினாக மீனாவுக்கு பதிலாக நவ்யா நாயர், முகேஷுக்கு பதிலாக இளையதிலகம் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆனால் திரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். சொல்லப்போனால் இடைவேளைக்குப்பின் ஆஷாவின் டெர்ரரான நடிப்பு பார்வையாளர்களை கடைசிவரை திகிலிலேயே வைத்திருக்கும். படத்தின் வெற்றிக்கு ஆஷாவும் மிக முக்கிய தூணாக இருந்தார்.

அதனாலேயே கன்னடத்தில் இதை ரீமேக் செய்திருக்கும் நம்ம இயக்குனர் பி.வாசு அந்த கேரக்டரில் ஆஷாவே நடிக்கட்டும் என விட்டுவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவந்த ஆஷா ‘கர்மயோதா’ என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் ‘த்ரிஷயம்’ தான் அவரை ஒரேயடியாக புகழின் உச்சிக்கு ஏற்றியுள்ளது.

AashaDrishyamMeenaMohanlalNavyaP Vasuத்ரிஷ்யம்பி.வாசுபிரபுமீனாமோகன்லால்ரவிச்சந்திரன்வ்யா நாயர்