படத்திற்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என ஏற்கனவே ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இந்தக்கதைக்கு இந்த டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதனை முறைப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
மதன் கார்க்கி பாடல்களை எழுத, தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார் விஷால். நவம்பர் 4-வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து, 2014 சம்மர் சீசனில் வெளியிடத்திட்டமிட்டு இருக்கிறார்கள்.
A fantastic experience at 남해출장안마. The staff were professional and the atmosphere was calming.