திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும் வகையில் ‘மை கிராண்ட் வெட்டிங்’ என்கிற செயலியை (App), ‘மை கிராண்ட் வெட்டிங் நிறுவனத்தை நடத்திவரும் ஆர்.சரத் என்பவர் ஏற்படுத்தி உள்ளார்.. ‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய வசதி பற்றி அவரிடம் கேட்டபோது, “இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை.. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த மை கிராண்ட் வெட்டிங் எனக்கு ரொம்பவே கைகொடுக்கும்” என்றார்..
தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அமைவதில்லை என விஜய்சேதுபதி அமர்ந்திருந்த ஒரு மேடையிலே சில மாதங்களுக்கு முன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ஸ்ரீஜா. இப்போது வாய்ப்புகள் ஏதும் தேடி வந்துள்ளதா என கேட்டதற்கு, “அந்த நிகழ்விற்கு பிறகு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள்.., உரிய வாய்ப்புகள் வரும்போது அழைப்பதாகவும் ஊக்கப்படுத்தியுள்ளனர்…” என்றார் ஸ்ரீஜா.