‘மிக மிக அவசரம்’ பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பாரதிராஜா..!

தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாக்கி இருக்கிறது.

மிக மிக அவசரம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் முதல் மோஷன் போஸ்டரை பாரதிராஜா வெளியிட்டார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா, ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

‘மிக மிக அவசரம்’BharathirajaMiga Miga Avasaramபாரதிராஜா