“மாஸ் முழுக்க முழுக்க பேய்ப்படம் அல்ல” – சூர்யா விளக்கம்..!

‘மாஸ்’ படத்தின் ஆடியோ ரிலீசை எளிமையாக நடத்திவிட்டதால், தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தது ‘மாஸ்’ படக்குழு. படத்தில் நயன்தாரா, பிரணீதா என இரண்டு ஹீரோயின்கள்.. யுவன் சங்கர் ராஜாவின் இசை என சூர்யா, வெங்கட் பிரபு இருவரின் படங்களில் இருக்கும் அம்சங்களுக்கு குறைவில்லாமல் உருவாகியிருக்கிறதாம் ‘மாஸ்’. ஆரம்பத்தில் வெங்கட் பிரபு டைரக்சனில் நடிக்கப்போகிறீர்களா என பலரும் ஆச்சர்யமாக கேள்வி கேட்க, சூர்யாவோ வெங்கட் பிரபு சொன்ன கதையைத்தான் ஆச்சர்யமாக பார்த்தாராம்.

“வரிசையாக பேய் படங்கள் வருகிற சமயத்தில் நீங்களும் பேய் படத்தில் நடிக்கிறீங்களே என கேட்கிறார்கள்.. இதை முழுக்க முழுக்க பேய் படம் என்றோ, ஹாரர் படம் என்றோ சொல்ல முடியாது. ஒரு சில காட்சிகள் மட்டும் தான் அப்படி இருக்கும் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை, களத்தை கையில் எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு மொத்தத்தில் இந்த சம்மர் ஹாலிடேக்கு ஏற்ற படமாக மாஸ் இருக்கும்” என்று கூறியுள்ளார் சூர்யா.

சூர்யாநயன்தாராபிரணீதாமாஸ்யுவன் சங்கர் ராஜாவெங்கட் பிரபு