வெங்கட்பிரபு சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படத்திற்கு ‘மாஸ்’ என டைட்டிலை அறிவித்தபோதே, கொஞ்சம் சலசலப்பு எழத்தான் செய்தது.. படத்தின் டைட்டில் தமிழில் இல்லாத வார்த்தை என்பதால் படத்திற்கு வரிவிலக்கு விஷயத்தில் சிக்கல் ஏற்படுமே என்கிற சந்தேகத்தால் எழுந்த சலசலப்புதான் அது.
இப்போது வரிவிலக்கு பிரச்சனையை தவிர்க்கும் விதமாக படத்திற்கு ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என பெயரை மாற்றி அறிவித்துள்ளது ஸ்டுடியோகிரீன் நிறுவனம். டைட்டிலில் என்னங்க இருக்கு என வெங்கட்பிரபு சொன்னதுபோல, மாஸ் என்கிற டைட்டில் தான் மாறியுள்ளதே தவிர, சூர்யாவின் ‘மாஸ்’ அப்படியே தான் இருக்கப்போகிறது.