விதார்த்துக்கு ஜூன் மாதம் கெட்டிமேளம்..!

நடிகர் விதார்த்திற்கு ஏற்ற ஜோடிப்புறா இல்லையில்லை.. ஜோடி மைனா சிக்கிவிட்டது… ஆம் விதார்த்திற்கும் திருமண யோகம் கூடி வந்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை மணக்க இருக்கிறார் விதார்த்.. காயத்ரி தற்போது வக்கீலுக்கு படித்து வருகிறார்.

இவரது தந்தை சிவானந்தமும் ஒரு வக்கீல் தான். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், பழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருமணம் வரும் ஜூன்-11ம் தேதி திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 17ம் தேதி நடக்கிறது.

காயத்ரிசிவானந்தம்மைனாவிதார்த்