இந்தப்படத்தில் முதன்முதலாக நஸ்ரியாவும் ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடலைப்பாடி, அது ஹிட்டும் ஆகிவிட்டதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி ரசிகர்களை நீண்டநாள் காத்திருக்க வைக்காமல், படம் வரும் ஜனவரி-23ஆம் தேதி வெளியாகிறது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தப்படத்தில் நம்ம சந்தானமும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இதன்மூலம் முதன்முதலாக மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார் சந்தானம். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் சந்தானம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.