தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை ‘மகாநதி’ என்ற பெயரிலேயே படமாக்குகின்றனர்.. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதாநாயகனாக ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருகிறார். இன்றைய இளம் நடிகர்களில் ஜெமினியின் ரோலுக்கு பொருத்தமானவராக இவர் இருப்பதாலும் துல்கர் சல்மானை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது..
நாக் அஷ்வின் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் துவங்கியது.. இந்த ஷூட்டிங்கில் ஜெமினி கணேசன் கெட்டப்பில் நடிகர் துல்கர் சல்மான் கலந்துகொண்டார். சாவித்ரியின் தோழியாக விளங்கிய ஜமுனா என்கிற கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதாகவும் அந்த கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும் ஒரு தகவல் உலாவந்துகொண்டு இருக்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது