சமீபத்தில் கூட திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷை அங்கிருந்த மலையாள ரசிகர்கள் ‘கொலவெறி’ பாடலின் சில வரிகளையாவது பாடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தனுஷும் பாடியிருக்கிறார்.
ஆரம்பத்தில் சந்தோஷமாக இதை அனுபவித்த தனுஷுக்கு இப்போது எந்த பொது நிகழ்ச்சியிலோ மேடைகளிலோ கலந்துகொள்ளவே தயக்கமாக இருக்கிறதாம். “நான் ஒரு நடிகன் என்பதையே மக்கள் மறந்துவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. இன்னும்கூட கொலவெறி பாடலின் இரண்டு வரியாவது பாடுங்கள் என அவர்கள் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்தப்பாடலை பாட எனக்கே போர் அடிக்கிறது” என்று தன் சங்கடத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.