அதனால் ‘கோச்சடையான்’ நின்று நிதானமாக விளையாட தாராளமாக நேரம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் ரஜினிக்கும் ஏப்ரல் மாததிற்கும் சென்டிமெண்டான கூட்டணியே உண்டு. இதற்குமுன் ‘படையப்பா’ ஏப்ரல்-9லும், ‘அருணாச்சலம்’ ஏப்ரல்-11லும், பிளாக்பஸ்டர் ‘சந்திரமுகி’ ஏப்ரல்-15லும் வெளியாகி மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கின்றன. அதனால் கோச்சடையானிலும் அந்த சாதனை வரலாறு தொடரும் என்பது உறுதி.