பிந்துமாதவியை வைத்து ‘ஹைக்கூ’ எழுதுகிறார் பாண்டிராஜ்..!

‘இது நம்ம ஆளு’ படத்தின் வேலைகளை கிட்டத்தட்ட நெருக்கி முடித்துவிட்ட இயக்குனர் பாண்டிராஜ், அதன ரிலீசை சம்மரில் எதிர்பார்க்கிறார். அதே சமயம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கிவரும் இன்னொரு படத்திலும் விறுவிறுப்பு காட்டிவருகிறார். பாண்டிராஜின் ‘பசங்க’, ‘மெரீனா’ படங்களைபோல இதுவும் குழந்தைகளை கவரும் படமாக இருக்குமாம்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வை தொடர்ந்து பாண்டிராஜின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இந்தப்படத்திற்கு தற்போது ‘ஹைக்கூ’ என பெயர் வைத்துள்ளார் பாண்டிராஜ். இதில் சூர்யாவும் அமலாபாலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்திற்கு போனஸ் மைலேஜ். சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் பாண்டிராஜின் பசங்க புரொடக்சனும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றது.

2டி நிறுவனம்..!அமலாபால்இது நம்ம ஆளுகேடி பில்லா கில்லாடி ரங்காசூர்யாபசங்கபசங்க புரொடக்சன்பாண்டிராஜ்பிந்துமாதவிமெரீனாஹைக்கூ