தரில்லர் படத்தில் நடித்திருக்கிறீர்களே, உங்களுக்கு பேய், பிசாசு என்றால் பயமாக இல்லையா என்று கேட்டால் அவரது பதில் வேறுமாதிரிஇருக்கிறது. “எனக்கு இரவில் நடமாடுவது என்றால் பயம்தான்,. ஆனால் அது பேய், பிசாசு இவற்றால் அல்ல. மனித உருவில் நடமாடும் மிருகங்களைக கண்டுதான்” என்கிறார் காவ்யா ஷெட்டி. இவரை இந்த அளவுக்கு மனதை பாதிக்கச் செய்தது, சமீபத்தில் மும்பை பெண் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தானாம்.