காஷ்மோரா படத்தில் புதிய கேமரா டெக்னாலஜி..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை வைத்து ‘காஷ்மோரா’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். காஷ்மோரா என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்கள் இணையதளத்தில் தேடி பாருங்கள்.. கிடைக்கும் பதிலை படித்துவிட்டு டெரர் ஆகாமல் இருந்தால் சரி..

இந்தப்படத்திற்காக ஒரு முக்கியமான காட்சி ஒன்றை கிராபிக்ஸை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் என முதலில் கோகுல் முடிவு செய்திருந்தார். ஆனால் அதன்பின் 36௦ டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையிலான ஆம்னி டைரக்சனல் கேமரா டெக்னாலஜி ஒன்று இருப்பது தெரியவந்ததும் அதனை வைத்து சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கியுள்ளார்களாம்.

இந்த கேமரா டெக்னாலஜி மிகப்பெரிய இடங்களில் வைட் ஆங்கிளில் காட்சிகளை படமாக்க பயன்படும் ஒரு டெக்னிக் ஆகும். இந்திய சினிமா வரலாற்றில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவது இதுவே முதன்முறை. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒளிப்பதிவாளர் என்கிற பெருமை ஓம் பிரகாஷையே சேரும்.

கார்த்திகாஷ்மோராநயன்தாராஸ்ரீதிவ்யா