கார்த்தி, நயன்தாரா என்கிற புது காம்பினேஷனில் உருவாக்கி வரும் ‘காஷ்மோரா’ படம் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒன்றாகவே இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.. கூடவே ஸ்ரீதிவ்யாவும் வேறு இருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் புகைப்படங்களையும் போஸ்டர்களையும் பார்க்கும்போது இயக்குனர் கோகுல் நிச்சயம் ரசிகர்களை புதிய உலகத்துக்கு அழைத்துச்செல்வார் என்பது மட்டும். தெரிகிறது.
தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்தபடியால் திட்டமிட்டபடி ராப்பகலாக உழைத்து வருகிறது ‘காஷ்மோரா’ படக்குழு.. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வரும் அக்-7ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் தேனாண்டாள் பிக்சர்ஸ் இணைந்து வெளியிடுகின்றன.