தீபாவளி ரிலீஸை உறுதி செய்த ‘களவாணி மாப்பிள்ளை’..!

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கியுள்ளார் காந்தி மணிவாசகம்.இவர் பிரபல இயக்குனர் மணிவாசகத்தின் மகன்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

Kalavani Mappillaiஆனந்த்ராஜ்என்.ஆர்.ரகுநந்தன்களவாணி மாப்பிள்ளைகாந்தி மணிவாசகம்கிரேன் மனோகர்ஜோதிதேவயாணிநாஞ்சில் விஜயன்மகாநதி சங்கர்மனோபாலாமுனீஸ்காந்த்மொட்டை ராஜேந்திரன்ரேணுகாலல்லு