காதலை உதறித்தள்ள 600 கி.மீ பயணம் செய்யும் காதலர்கள்..!

காதலிச்சோம்.. சரி.. செட்டாகல என்றால் பேசாமல் ஏதாவது காபி ஷாப்பில் குட்பை சொல்லிவிட்டு பிரிய வேண்டியதுதானே.. அதை விட்டுவிட்டு, காபி விளையும் தேசமான கூர்க் பகுதிக்கு 600 கி.மீ ட்ராவல் பண்ணி போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்றால் விஷயம் இருக்கிறது என்கிறார் ‘ஜிப்பா ஜிமிக்கி’ படத்தின் இயக்குனர் ஆர்.ராஜசேகர்..

பத்திரிக்கை சமூகத்தில் இருந்து சினிமாவில் நுழைந்திருக்கும் இன்னொரு பத்திரிகையாளர்.. மாலை முரசு பத்திரிகையில் பணியாற்றியவர். படத்தில் காதலர்களின் தந்தை இருவரும் நண்பர்களாம். அதனால் தான் உள்ளூரில் காதலை உடைத்துக்கொள்ளாமல் வெளியூருக்கு பயணப்படுகிறார்களாம். அந்தப்பயணம் அவர்களிடம் என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதுதான் மீதிக்கதையாம்.

படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கிரீஸ் திவாகர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஆனாலும் படத்தை தயாரித்திருக்கும் அவரது தந்தை திவாகர், தனது மகன் தமிழில் தான் அறிமுகமாகவேண்டும் என்கிற ஆசையில் அவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். குஷ்பு பிரசாத் என்பவர் படத்தின் கதாநாயகியாக நடிகிறார். அவரது உண்மையான பெயரே குஷ்பு தானாம்.

இந்தப்படத்தில் காதலர்களாக நடிப்பவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், ஆடுகளம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன். இளவரசு என தெரிந்த முகங்கள் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுகிறது.. குறிப்பாக நான் கடவுள் ராஜேந்திரன் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டே பாட்டுப்பாடுவதும், விஜய் டைப்பில் டான்ஸ் ஆடுவதும் என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

ஆர்.ராஜசேகர்ஜிப்பா ஜிமிக்கி