தற்போது விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இப்படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக, தனது குருவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெருகேற்றியுள்ளார். ட்ரம்ஸ் சிவமணி முதன்முறையாக இசையமைத்து வரும் இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மார்ச் மாதல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.