உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

யாரும் எதையும் திணிக்கவில்லை.. வற்புறுத்தவும் இல்லை.. அது கலைக்குடும்ப வாரிசு ரத்தம்.. அதனால் தான் தன் தந்தையைப்போல அரசியலான சிங்கப்பதையில் போகாமல் சினிமா மட்டுமே தனது இலக்கு என உதயநிதி ஸ்டாலின் தான் போகவேண்டிய பூப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

எடுத்த எடுப்பிலேயே நானும் ஹீரோ தான் என டாப் கியரை தூக்காமல் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என சினிமாவின் சூட்சுமங்களை ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதே சினிமாவின் மீதான அவரது நேசிப்பு தெரிய ஆரம்பித்தது.

ஒருபக்கம் விஜய், சூர்யா, ஆர்யா என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தாலும் இன்னொரு பக்கம் சிறிய பட்ஜெட்டில் தயாரான நல்ல படங்களையும் வாங்கி கைகொடுத்து தூக்கிவிடும் பணியையும் சரியாகவே செய்துவந்தார் உதயநிதி. குறிப்பாக திரைப்படத்திலிருந்து அரசியலை கொஞ்சம் தூரத்தில் தள்ளியே வைக்கவும் தவறவில்லை.

சரியான நேரத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஸ்கிரிப்ட்டுடன் இயக்குனர் ராஜேஸ் தேடிவர அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார் உதயநிதி. அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்க்க அவருடன் நட்புக்கூட்டணி அமைத்தார் நம் சந்தானம். படம் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பிய வரலாறுதான் நமக்கு தெரியுமே..

தனக்கு எது செட் ஆகுமோ அதிலிருந்து ஒரு இஞ்ச் கூட மீறாமல் தயாரிப்பு, நடிப்பு என நிதானமாக நடைபோட்டுவரும் உதயநிதி சமீபத்தில் ‘கெத்து’ படத்தை முடித்துவிட்டு, தற்போது ‘ஜாலி எல்.எல்.பி’ இந்திப்பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் உதயநிதிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

‘Gethu’BirthdayUdhayanidhi