விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் ஹன்சிகா..?

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ‘கத்தி’ படத்தில் நடித்துவரும் விஜய் அந்தப்படத்தை முடித்துவிட்டு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அழைத்துவர பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவரிட தேதிகள் இல்லாததால் இங்கே உள்ள நடிகைகளில் யாரை அணுகலாம் என யோசித்தவர்களுக்கு பளிச்சென ஹன்சிகா கண்ணுக்கு தெரிந்தார்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார் ஹன்சிகா. தற்போது அவர் நிறைய படங்களில் நடித்து வந்தாலும் அவர் கைவசம் இவர்கள் கேட்ட தேதிகள் இருந்ததால் விஜய்க்கு ஜோடியாக அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

HansikaVelayudhamVijayஏ.ஆர்.முருகதாஸ்கத்திசிம்புதேவன்விஜய்வேலாயுதம்ஹன்சிகா