பெப்சியின் ‘ஸ்ட்ரைக்’ பயமுறுத்தல் ; ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர் சங்கம்..!

சமீபத்தில் பெப்சி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவை அறிவித்தார் விஷால்.. அந்த முடிவின்படி, இனிமேல் பெப்சி தொழிலாளர்களுடன் தான் படப்பிடிப்பிடிப்பு நடத்த வேண்டும் என நிர்ப்பந்தம் இல்லை.. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வசதியான தொழிலாளர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது..

இதைக்கண்டு பெப்சி தரப்பில் கலக்கமடைந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், அல்லது இறங்கிவர விரும்பாமல், நாளை (ஆக-1) முதல் பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

பெப்சி எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என இதுகுறித்து கூறியுள்ள விஷால், ஆக-1ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து வழக்கம் போல படப்பிடிப்பு நடக்கும் என்றும் அப்படி படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தக்க பாதுகாப்பு வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

FefsiProducer CouncilRKSelvamaniVishalஆர்.கே.செல்வமணிதயாரிப்பாளர் சங்கம்பெப்சிவிஷால்