இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் என்றால் அது கார்த்தியின் ‘காஷ்மோரா’வும், தனுஷின் ‘கொடி’யும் தான். ஆனால் இதே தீபாவளி தினத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் படமும் விஜய் படமும் வெளியானால் எப்படி இருக்கும்..? நல்லாத்தான் இருக்கும்.. ஆனால் அதுதான் ‘கபாலி’யும் ‘தெறி’யும் ரிலீசாகிவிட்டதே இனி அடுத்த வருடம் தானே அவர்களது படங்களை பார்க்க முடியும் என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனாலும் இந்த இரண்டு தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டர் ஒரு சூப்பர் ஐடியா செய்திருக்கிறதாம். அதன்படி தீபாவளி தினத்தன்று காலைக்காட்சி மட்டும் ‘கபாலி’யும் ‘தெறி’யும் சிறப்புக்காட்சியாக திரையிட இருக்கிறார்களாம்.