நாளை மறுநாள்(நவ-27) தனுஷ் நடித்த தங்கமகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகிறது.. தனுஷுக்கு ஜோடியாக, சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நடித்துள்ள இந்தப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் தனுஷ் நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
இதில் ‘என்ன சொல்ல’ என்கிற பாடலை பாடியுள்ள பின்னணி பாடகி ஸ்வேதா மேனன், பாடுவதற்கு வசதியாக தனுஷ் தனக்கு பாடலை ஆங்கில வரிகளில் தனது கைப்பட எழுதிக்கொடுத்த பேப்பரை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு “எதோ கிறுக்கி தள்ளிருக்கேன்” என தனுஷ் பதிலளித்துள்ளார்.