வெளியானது தனுஷின் இந்திப்பட போஸ்டர்..!

 

இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களை டைரக்ட் பண்ணி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு அமிதாப் பச்சன், தனுஷ்  நடிப்பில் ‘ஷமிதாப்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் பால்கி.

‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் இந்தியில் நடிக்கும் அடுத்த படமே பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் என்பதால் இந்தப்படம் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது.  தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘நாடோடிகள்’ அபிநயா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். தற்போது முதன்முதலாக இந்தப்படத்தின் போஸ்டரை அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார்.

அக்‌ஷராஅபிநயாஅமிதாப் பச்சன்சீனிகம்தனுஷ்பாபால்கிராஞ்சனாஷமிதாப்