பதினைந்து நாட்கள் கழித்து வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது ஆஜரான தாமினி, தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதற்கு சந்துருவின் தாயார் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மீண்டும் இந்த வழக்கு மதியத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமினி யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடனே செல்லலாம் என உத்தரவிட்டனர். மேலும் சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தனது தந்தை சேரனுடன் சென்றார் தாமினி. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சேரனின் தந்தை பாசமே வென்றுள்ளது.
947062 749012It is difficult to get knowledgeable people with this topic, but the truth is could be seen as do you know what you are referring to! Thanks 737458