நடிகர்கள் : அஜய், ஞானேஸ்வரி, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு
இசை : பாரத் மஞ்சிராஜு
ஒளிப்பதிவு : ஜி.வி.அஜய் குமார்
இயக்கம் : சேத்குரி மதுசூதன்
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
அஜய் முதன்மை வேடத்தில் நடிக்க, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், சுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சக்ரவியூஹம்’. சேத்குரி மதுசூதனன் இயக்கியிருக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான ‘சக்ரவியூஹம்’ அமேசான் பிரைவில் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை துவங்குகிறார்.
அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைப்பவர், பிறகு சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத்தை சந்தேகிக்கிறார். கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் காணாமல் போனதால், சத்யா சிரியின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது சந்தேகம் கொள்கிறார்.
இப்படி பலர் மீது தனது சந்தேகப்பார்வையை திருப்பும் அஜய், இறுதியில் உண்மையான குற்றவாளி யார்?, எதற்காக அவர் சிரியை கொலை செய்தார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை பரபரப்பாக சொல்வதே ‘சக்ரவியூஹம்’.
படத்தின் துவக்க காட்சி முதல் இறுதிக் காட்சி வரை பரபரப்பாக திரைக்கதை, வேகமான காட்சிகள், சுவாரஸ்யமான திருப்புமுனை என்று கதையோடு நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குநர் சேத்குரி மதுசூதனன்.
ஜி.வி.அஜய் குமாரின் ஒளிப்பதிவும், பாரத் மஞ்சிராஜின் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
போலீஸ் எஸ்.ஐ- ஆக நடித்திருக்கும் அஜய், விவேக் திரிவேதி ஊர்வசி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
பரபரப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரைக்கதையை ரசிகர்களுக்கு முழு திருபதியளிக்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குநர் “பேராசை அதிக துன்பத்தை தரும்” என்ற நல்ல கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், நல்ல க்ரைம் சஸ்பென்ஸ் படம் பார்க்க விரும்புகிறவர்கள் தாராளமாக ‘சக்ரவியூஹம்’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5