அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அற்புதமாக ஒத்துழைத்தார் விஷால். கூடவே லட்சுமிமேனன், சூரி, விக்ராந்த், பாரதிராஜா என வகையான கூட்டணி சேர, இதோ 50 நாட்களை வெற்றிகரமாக தொட்டிருக்கிறது பாண்டிய நாடு.
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன்.