சிக்கினார் சசிகுமார்..! செதுக்குகிறார் பாலா..!


மொட்டை அடிக்காதவரை மொட்டை அடிக்க வைப்பார்.. மொஸைக் கன்னத்தில் முட்புதர் போல தாடி வளர்க்க வைப்பார்.. தாடி இருக்கிறதா.. அப்ப மொழு மொழுன்னு ஷேவ் பண்ணிடு என்பார். இயக்குனர் பாலாவிடம் இருந்து விக்ரம், சூர்யா, ஆர்யா இவர்களே தப்ப முடியாதபோது சசிகுமார் மட்டும் தப்பமுடியுமா என்ன..?

கரகாட்டத்தை மையமாக வைத்து தற்போது, தான் இயக்கும் படத்திற்காக சசிகுமாரை டோட்டலாக மாற்றியிருக்கிறார் பாலா. சசிகுமாரின் பிராண்டே அந்த அழகான தாடி தான்.. அதை ஷேவ் பண்ணவைத்த பாலா, அடுத்ததாக சசியின் அடர்த்தியான மீசையையும் பென்சில் மீசையாக மாற்றிவிட்டார். இப்போது சசிகுமாரின் தோற்றம் கிட்டத்தட்ட மறைந்த காமெடி நடிகர் சந்திரபாபுவை நினைவூட்டும் இதமாக இருக்கிறதாம்.

சரி.. கெட்டப்பை மாற்றியாச்சு.. அடுத்தது கிராஸ் செக் தானே.. அதையும் சமீபத்தில் செய்து காட்டிவிட்டார் சசிகுமார். சில தினங்களுக்கு முன் பாலாவின் அலுவலகத்திற்கு வந்து திரும்பிய சசிகுமார், நேராக தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள டீக்கடைக்கு சென்று, கேஷுவலாக டீ சாப்பிட்டிருக்கிறார்,. ஆனால் அங்கிருந்த ஒருத்தருக்கு கூட அவரை அடையாளம் தெரியவில்லையாம். எது எபடியோ சசிகுமாருக்கு இன்னும் விதவிதமான அனுபவங்கள் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

AaryaAvan IvanBalaBrahmanIllayarajaKarakattamKutty PuliParadesiPithamaganSasikumarSethuSuriyaVaralaxmi SarathkumarVikramVishal
Comments (0)
Add Comment