‘பாகுபலி’யில் சர்ச்சைக்குரிய ‘பகடை’ வார்த்தை நீக்கம்..!

வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் தற்போது ஒரு சின்ன சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது படத்தில், “என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது” என நாயகன் வசனம் பேசும் காட்சி உண்டு..

தாயக்கட்டையால் ஆடப்படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் அதை எழுதியிருந்தார் இந்தப்படத்திற்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி. ஆனால் அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

இப்போது தெரிய வந்துள்ளதால், அந்த வார்த்தையை நீக்கிவிட்டு திரையிடுவதற்கான வேலை நடக்கிறதாம். யார் மனமும் புண்படக்கூடாது என்று விரைவில் அந்தச்சொல் நீக்கப்படும் என்றும், இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மதன் கார்க்கி கூறியுள்ளார்.

பாகுபலிமதன் கார்க்கி