இதற்கிடையே அஞ்சலி படங்களில் நடிப்பதில்லை என்றும் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் ஒரு செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அஞ்சலி தற்போது நடித்துவரும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்ராவந்தி கிஷோர் குமார் இந்த செய்தியை மறுத்துள்ளதோடு அஞ்சலி தற்போது தன்னுடைய படத்தில் டப்பிங் பேசிவருவதாகவும் விரைவில் ஒரே ஒரு பாடல் காட்சிக்காக வெங்கடேஷுடன் ஜப்பான் செல்லவிருப்பதாகவும் கூறி அஞ்சலியைப் பற்றி வரும் தவறான செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.