அமெரிக்காவுக்கு போகவில்லை.. ஜப்பானுக்குத்தான் போகிறார்அஞ்சலி

64

அஞ்சலி சமீபகாலமாக தனது திறமைகளால் அறியப்பட்டதைவிட தன்னைச்சுற்றி எழுந்த பிரச்சனைகளால் அதிகம் பேசப்பட்டார் என்பதே உண்மை. அதனால் தமிழில் நடிக்கும் வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு தெலுங்குப்படங்களில் மட்டும் நடித்துவருகிறார் அஞ்சலி. சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது போல்பச்சன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அஞ்சலி

இதற்கிடையே அஞ்சலி படங்களில் நடிப்பதில்லை என்றும் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் ஒரு செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அஞ்சலி தற்போது நடித்துவரும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்ராவந்தி கிஷோர் குமார் இந்த செய்தியை மறுத்துள்ளதோடு அஞ்சலி தற்போது தன்னுடைய படத்தில் டப்பிங் பேசிவருவதாகவும் விரைவில் ஒரே ஒரு பாடல் காட்சிக்காக வெங்கடேஷுடன் ஜப்பான் செல்லவிருப்பதாகவும் கூறி அஞ்சலியைப் பற்றி வரும் தவறான செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.