உடனே சுதாரித்துக்கொண்ட ஸ்ருதி அவனை பிடித்து தள்ளிவிட்டு கதவை வேகமாக சாத்தினார். இதில் அந்த மர்ம நபரின் கை கதவிடுக்கில் சிக்கியதும் தன்னை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டான். ஸ்ருதிஹாசனுக்கு காயம் இல்லை என்றாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீண்டுவர நிறைய நேரம் பிடித்தது.
இதுபற்றி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதிஹாசன் தான் நலமாக இருப்பதாகவும் தன்னை தாக்கவந்தது ரசிகர் என்ற போர்வையில் வந்தவனா என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.