விவேக்கையாவது அவ்வப்போது ஒரு சில படங்களில் பார்க்க முடிகிறது.. ஆனால் எவ்வளவு நாள் ஆகிவிட்டது.? வடிவேலுவை காமெடி நடிகனாக பார்த்து….? வடிவேலு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக ஒதுங்கிக்கொள்ள, தலைமுறை இடைவெளியால் விவேக்கிற்கும் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது உண்மை..
முன்பெல்லாம் ரஜினி-கமல், அஜித்-விஜய் படங்கள் வெளியாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பைப்போல விவேக், வடிவேலு படங்கள் ஒரே நாளில் மோதினால் அங்கேயும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது… யாருடைய காமெடி பெஸ்ட் என்கிற ஒரு போட்டி இருக்கும்..
ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் அப்படி ஒரு நிலை ஏற்படவே இல்லை.. ஆனால் நீண்ட் நாட்கள் கழித்து இப்போது வரும் தீபாவளி திருநாளில் மீண்டும் இருவர் நடித்த படங்கள் ஒன்றாக மோத இருக்கின்றன.. ஆம் கார்த்தியின் ‘காஷ்மோரா’ படத்தில் விவேக்கும், விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் வடிவேலுவும் நடித்துள்ளார்கள்.. இந்தப்படங்கள் இரண்டுமே தீபாவளிக்கு ரிலீஸாகின்றன.