தமிழில் இன்னும் வெளிவராத 88 என்கிற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் உபாசனா. ஆனாலும் கதாநாயகியாக அறிமுகமானது என்னவோ முதலில் கன்னட படம் மூலமாகத் தான். அதன்பின் சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்..ஆனாலும் சமீபத்தில் வெளியான டிராபிக் ராமசாமி படம் தான் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது என்கிறார் உபாசனா..
இவரது அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..இவர் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்… ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. சாப்ட்வேர் இஞ்சினீயரான இவர் 2015 ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல் .
“விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வில்லா டூ வில்லேஜ்’ நிகழ்ச்சியில் நகர பெண்களை கிராமத்துக்கு அழைத்து சென்று நடத்திய நிகழ்ச்சி எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது.. அந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு real fighter என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது பெருமையாக இருக்கு..அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் “கருத்துக்களை பதிவு செய் ” எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்” என்றார் உபாசனா.