முன்னணி OTT வீடியோ சேவையான Viu தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு பிரபலமான அரட்டை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. “Viu ஹலோ சகோ” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை திறமையான ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த தமிழ் அரட்டை நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொள்ளும் முன்னணி நட்சத்திரங்கள், தங்கள் இரகசியங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வகையில் விருந்தினர்களாக பங்கேற்பார்கள்.
ஒரு அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன் கூறும்போது, “பொழுதுபோக்கு துறையில் வேலை செய்யும் எவரும் பொதுவெளியில் பெரும்பாலும் அவர்களாகவே, வெளிப்படையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ‘Viu ஹலோ சகோ’வின் மூலம் பார்வையாளர்கள் பிரபலங்களின் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியும். அவர்களின் நேர்மையான உரையாடல்களால் அவர்களின் அழகான வாழ்க்கை பயணங்களை அறிந்து கொள்ள முடியும். Viuல் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.
13 எபிசோட்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி Viu ஆப் மற்றும் சன் டி.வியில் 2018 அக்டோபர் 28 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும்.