சூர்யாவுடன் நடிக்க விரும்பும் சாய்பல்லவி..!


மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘பிரேமம்’ படம் மூலம் மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘மலர்’ டீச்சராக மாறியவர் சாய் பல்லவி.. இத்தனைக்கும் தாம்தூம் படஹ்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர்தான். ஆனால் இன்று மலையாளத்தில் பிரபலமாகி விட்டார். அத்துடன் தமிழிலும் அவரை வரவேற்க ரசிகர்களும் திரையுலகத்தினரும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் சாய்பல்லவியோ தமிழுக்கு வருவதார்கான அறிகுறி ஒன்றையும் காணோம்.. மணிரத்னம் டைரக்சனில் நடிக்கிறார் என்ன்று தகவல்கள் வெளியாகி அதுவும் புஸ்வாணமாகி போனதுதான் மிச்சம்… ஆனால் சாய்பள்ளவியின் மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது சூர்யா தானாம். நடிக்க வருவதற்கு முன்பிருந்தே சூர்யாவின் ரசிகையான சாய்பல்லவிக்கு சூர்யாவுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பது ஆசை. கனவு என்று கூட சொல்லலாமாம்.

PremamS 3Sai PallaviSuriya