கமல் டைட்டிலை கைப்பற்றினார் ஜோதிகா..!

கமல் நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன் வெளியான படம் தான் ‘மகளிர் மட்டும்’.. தற்போது ஜோதிகா நடிக்கும் படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டு நேற்று மாலை இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. குற்றம் கடிதல் டைரக்டர் பிரம்மா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஜோதிகா, ரீ-என்ட்ரியாக 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின்னர் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த ஜோதிகாவுக்கு குற்றம் கடிதல் டைரக்டர் பிரம்மா சொன்ன கதை பிடித்ததால் அவருக்கு கால்சீட் கொடுத்தார்.

இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இப்போது கமல் டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகா மட்டுமின்றி, பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா, நாசர், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

JyothikhaKamalMagalir Mattumகமல்ஜோதிகாமகளிர் மட்டும்