உலகத்தமிழர்களுக்காக படங்களை வெளியிட சூர்யாவின் 2டி புதிய முயற்சி..!

உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள், தாங்கள் விரும்பும் படங்களை மிக உயரிய தரத்தில் கண்டுகளிக்கும் விதமாக ஹீரோ டாக்கீஸ்.காம் (HeroTalkies.com) என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டு படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்துடன் தற்போது சூர்யாவின் 2டி நிறுவனமும் ஒரு முதலீட்டாளராக இணைந்துள்ளது.

2டி நிறுவனம் ஏற்கனவே ’36 வயதினிலே, சமீபத்தில் வெளியான ‘பசங்க-2’ என இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. தற்போது சூர்யா நடித்துவரும் ‘24’ படத்தையும் தயாரித்து வருகிறது. “நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகிறோம்.. அதன் ஒரு படியாகத்தான் இந்த நிறுவனத்துடன் முதலீட்டார்களில் ஒருவராக இணைந்துள்ளோம்” என்கிறார் 2டி தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர பாண்டியன்.

Actor SuryaHeroTalkies.comPasanga-2Rajasekara PandiyanTamil Cinemaஹீரோ டாக்கீஸ்