விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடித்துவரும் ‘24’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படலாம்.
இன்னொரு பக்கம் இந்தப்படத்திற்கான டப்பிங் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் சூர்யா. இதில் ஒன்று, இரண்டல்ல.. மூன்று கேரக்டர்களில் சூர்யா நடித்துள்ளதால் மூன்றுக்கும் மூன்றுவிதமான மாடுலேசன்களில் டப்பிங் பேசவேண்டிய சவாலான பணியை மேற்கொண்டிருக்கிறார் சூர்யா..
சூர்யாவின் படங்கள் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருவது தெரிந்தது தானே.. அந்தவகையில் இந்தமுறை ‘24’ படத்துக்காக சூர்யாவே தெலுங்கிலும் டப்பிங் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதில் சிறிதளவும் உண்மை இல்லை..
வழக்கம்போல சூர்யாவிற்காக தெலுங்கில் டப்பிங் பேசிவரும் ஸ்ரீனிவாச மூர்த்தி தான் இந்தமுறையும் டப்பிங் பேசுகிறார்.. ஆனால் இந்த முறை மூன்று கேரக்டர்களுக்கு மூன்றுவிதமாக பேசவேண்டும் என்பதால் சூர்யாவைப்போல ஸ்ரீனிவாச மூர்த்திக்கும் டப்பிங் பணி நிச்சயம் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.