சமீபத்தில் அஸ்லம் தயாரிப்பில் இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கத்தில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் சாதாரண மனிதர்களில் இருந்து பிரபலங்கள் வரை பலதரப்பினரையும் கவர்ந்துள்ளது. எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக அழகாக காட்டிய இந்தப்படத்தை பார்த்து விட்டு நடிகர் சிவகுமாரும் கார்த்தியும் இந்தப்படத்தை மனதார பாராட்டியுள்ளனர்.
இது பற்றி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள கார்த்தி, “அப்பா இந்தப்படத்தை பார்த்து விட்டு தமிழ் சினிமாவின் உயிர், ஆன்மா எல்லாம் அருவி, அறம், ஒரு குப்பை கதை போன்ற படங்களில் தான் இருக்கிறது என மிக உயர்வாக இந்தப்படத்தை பற்றி வீட்டில் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார்” என சிலாகித்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார்.