புதுமுக நடிகர் கீதன் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் சீமத்துரை. இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக இன்னொரு நஸ்ரியா என செல்லமாக அழைக்கப்படும் வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய்கிருஷ்ணா இந்த ‘சீமத்துரை’ படத்தை தயாரிக்கிறார்கள்.