முகநூலை தாமதமாக திறந்த அபிஷேக் பச்சன்..!

பிரபலங்கள் எல்லாம் இப்போது சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கணக்கை துவங்கி அதில் தங்களைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் தாங்கள் நடித்துவரும் படங்களைப்பற்றிய தகவல்களை சுடச்சுட பரிமாறிக்கொள்கின்றனர்.

 

இப்போது பேஸ்புக்கின் புதிய வருகையாளர் பாலிவுட் நட்சத்திரம் அபிஷேக் பச்சன்.. பேஸ்புக்கிற்கு இவர் வந்துள்ளது தாமதமாகத்தான் என்றாலும் டிவிட்டரில் பல லட்சம் ரசிகர்களை தன்னிடத்தே வைத்திருக்கிறார். அங்கே வெற்றி இலக்கை தொட்டுவிட்டுத்தான் இங்கே நுழைந்திருக்கிறார்.

 

பேஸ்புக்கிலும் தனது ரசிகர்கள் நிறைய இருப்பதால் தான் இப்போது இதிலும் கணக்கு ஒன்றை துவங்கி உள்ளார் அபிஷேக் பச்சன்.. அதுமட்டுமல்ல, தனக்காக ஆட்களை நியமித்து இதனை ஆபரேட் செய்யாமல், தன கைப்படவே சொந்தமாக தனது திரைப்படங்கள், தனது சொந்த விஷயங்கள் குறித்த பதிவுகளை இடுகிறாராம் அபிஷேக்.

Abhishek BachchanFacebookஅபிஷேக் பச்சன்