‘88’ படத்தின் இசையை கைப்பற்றிய ‘டூ பா டூ’..!

கவிஞர் மதன் கார்க்கியை நிறுவனராக கொண்டு ‘டூ பா டூ’ என்கிற இசை நிறுவனம் ஒன்று பாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ என்கிற படத்தின் இசையுரிமையை ‘டூ பா டூ’ பெற்றுள்ளது. வரும் ஜூலை-21 ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் எம்.மதன். மேலும் ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், ஜி.எம்.குமார், ஜான் விஜய், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடங்களை ‘டூ பா டூ’ அணியினரை மிகவும் கவர்ந்ததால் இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.

'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்8888 movieDooPaaDooஅப்புக்குட்டிஎம்.மதன்ஜான் விஜய்ஜி.எம்.குமார்ஜெயப்ரகாஷ்டூ பா டூடேனியல் பாலாஜிதயா ரத்னம்மதன் கார்க்கி